பக்கங்கள்

29 டிசம்பர் 2011

விரலை நீட்டி சர்ச்சை ஏற்படுத்திய சோனம்!

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தனது நடுவிரலை உயர்த்திக் காட்டி அனைவரையும் அதிர வைத்தார் இந்தி நடிகை சோனம் கபூர்.
அனில் கபூரின் மகள் சோனம் கபூர். இந்தியில் நாயகியாக வலம் வரும் சோனம், வெளிப்படையாக பேசக் கூடியவர். தைரியமாக பேசக் கூடியவர்.ஆனால் தற்போது அவர் நடுவிரலைக் காட்டி அனைவரையும் அதிர வைத்துள்ளார். இது சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. ஆனாலும் சோனம் இப்படியெல்லாம் செய்திருக்கக் கூடாது என்று பாலிவுட்டில் பேச ஆரம்பித்துள்ளனர்.
பிளேயர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார் சோனம் கபூர். இப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த சோனம் கபூர், பிரஸ் மீட் முடிந்து கிளம்பியபோது தனது நடுவிரலை உயர்த்திக் காட்டி அனைவரையும் அதிர வைத்தார்.
நடுவிரலைக் காட்டியது குறித்து சோனத்திடம் கேட்டபோது, நடுவிரலைக் காட்டுவது என்பதில் எந்த விசேஷமும் இல்லை. இன்றைய இளைஞர்களின் மொழியாக அது உள்ளது. திரைப்படங்களுக்கு சென்சார் செய்வது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது எனக்குப் பிடிக்கவில்லை. அதைத்தான் நான் நடுவிரலைக் காட்டி வெளிப்படுத்தினேன். வேறு எந்தக் காரணமும் இதற்கு இல்லை.
இளைஞர்கள் இப்போது நடுவிரலை ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்வது சாதாரண விஷயம். ஒருவரது பேச்சு அல்லது செயல் பிடிக்காவிட்டால் நடுவிரலைக் கொள்வது சகஜமானதுதான்., இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பிரச்சினையாக்கக் கூடாது. அதுவும் கலை, திரைப்படங்களில் ஈடுபட்டிருப்போருக்கு இதெல்லாம் சாதாரணம். மேலும் இந்தியா பேச்சு, கருத்து சுதந்திரத்திற்குப் பெயர் போனது. அப்படிப்பட்ட நாட்டில் நான் நடுவிரலைக் காட்டியதை பெரிதாகப் பேசுவது வியப்பாக உள்ளது என்றார்.

27 டிசம்பர் 2011

மன்மோகனையும் பிடித்த கொலைவெறி!

ஊரே திட்டித் தீர்க்கிற அளவுக்கு விமர்சனங்களை கிளப்பியுள்ள தனுஷின் கொலவெறி பாட்டு, அவரை பிரதமருடன் விருந்து சாப்பிடும் அளவுக்கு 'உயர்த்தியுள்ளது'.
மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள '3' படத்தில் 'ஒய் திஸ் கொலைவெறி டி..' என்ற தமிங்கிலீஷ் பாட்டை எழுதிப் பாடியுள்ளார் தனுஷ். இந்தப் பாடல் ஏக பிரபலம் ஆகிவிட்டது. யு ட்யூபின் கோல்ட் விருது இந்தப் பாடலுக்கு தரப்பட்டது. டைம் இதழில் தனுஷின் பெயர் இடம்பெறும் அளவுக்கு பாப்புலராகிவிட்டது.
இன்னொரு பக்கம் தமிழ்ப் பாடலாசிரியர்கள், இசை விமர்சகர்கள் கடுமையாக இந்தப் பாட்டை விமர்சித்து வருகின்றனர். 'நேரடியான தமிழ்க் கொலை' இது என அவர்கள் சாடியுள்ளனர். ஏற்கெனவே தமிழ் சினிமா பாடல்களில் தமிழ் வார்த்தைகளின் உபயோகம் குறைந்துவிட்ட நிலையில், தனுஷின் இந்த 'தமிழ்க் கொலை' புதிய ட்ரெண்டை சினிமாவில் உருவாக்கியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளும் 'நிதானத்தில்' தனுஷ் இல்லை. டெல்லி, மும்பை, ஹைதராபாத் என நகரம் நகரமாக மதுவிருந்துகளில் இந்தப் பாட்டை சக நடிகைகளுடன் பாடி ஆடி வருகிறார்.
இந்த நிலையில், தனுஷை தன்னோடு விருந்துண்ண அழைத்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். ஜப்பான் பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் மன்மோகன் சிங் நாளை (டிசம்பர் 28) விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்கத்தான் தனுஷுக்கு பிரதமர் அலவலகதத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது.
ஏற்கெனவே கொலவெறி ஹிட்டால் மிதப்பிலிருந்த தனுஷ், இந்த புதிய கவுரவத்தால் தலைகால் புரியாத மகிழ்ச்சியில் திளைக்கிறார். அர்த்தமில்லாத தனது பாட்டுக்கு புதுப்புது அர்த்தங்களைக் கற்பித்துக் கூறி வருகிறார்.
அவர் கூறுகையில், "கொலை வெறி பாடல் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டுள்ளது. இந்த பாடல் மிகுந்த அர்த்தம் உள்ளது. பாடலில் உள்ள ஆங்கில வரிகள் ஒவ்வொருவரையும் டச் பண்ணிவிட்டன. இந்த வரிகளில் உள்ள நகைச்சுவை மற்றும் ஆழமான கருத்துக்கள் சாதாரண மக்களையும், இளைஞர்களையும் கவர்ந்து விட்டன. அதுதான் எனக்கு இத்தனை பெரிய கவுரவத்தைக் கொடுத்துள்ளது," என்றார்.

23 டிசம்பர் 2011

அமைதி வேண்டுகிறார் சிம்பு.

உலக அமைதிக்காக பாடல் ஒன்றை தமிழ் திரையுலக நாயகன் சிம்பு எழுதியுள்ளார். +தமிழ் திரையுலகில் நடிப்பு, நடனம், பாடல், இயக்கம் என பல தளங்களில் வலம் வரும் சிம்பு, உலக அமைதிக்காக ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இது அன்புக்கான பாடலாக, உலகத்தின் Love Anthem- ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தனது ஃபேஸ்புக் இணையத்தில் அவர், சிலர் 2012-ல் உலகம் அழிந்துவிடும் என நம்புகிறார்கள். வாய்ப்புள்ளது. அன்புக்கு பஞ்சம் பெருகுவதால், உலகம் முடிவுக்கு வந்துவிடலாம்.
நாம் அன்பை பரிமாறிக்கொள்வதில் மொழி தடையாக இருக்கிறது. 96 மொழிகளையும் பல கோடி மக்களையும் இணைக்க, தடைகளை உடைத்து, அனைவரும் உடையாத பந்தங்களாக.. இதோ.. உலக அமைதிக்காக ஒரு இந்தியனின் சிறு பங்களிப்பு..
சீக்கிரம் வருகிறது.. உலகத்துக்கான Love Anthem ! என்று தெரிவித்துள்ளார்.

22 டிசம்பர் 2011

மது வெறியில் கொலவெறி பாடிய தனுஸ்.

தமன்னா பிறந்த நாள் விழாவில் நடந்த மதுவிருந்தில் பங்கேற்ற தனுஷ் குடித்துவிட்டு பூனம் பாஜ்வாவுடன் ஒய் திஸ் கொலவெறி பாடலை பாடும் வீடியோ வெளியாகியுள்ளது.
தனுஷ் எழுதிப் பாடி பெரிய ஹிட்டாகியுள்ள பாட்டு ஒய் திஸ் கொல வெறிடி. இந்தப் பாடல் ஹிட்டான அளவுக்கு, இசை ரசிகர்களிடம் திட்டும் வாங்கிக் கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம், பார்ட்டிகளில் இந்தப் பாட்டுக்கு ஏக மவுசு.
சமீபத்தில் நடிகை தமன்னாவின் பிறந்தநாள் விழா பார்ட்டி நட்சத்திர ஓட்டலில் உள்ள பாரில் நடந்துள்ளது. இந்த விழாவில் மதுவருந்திக் கொண்டு, கொலவெறி பாட்டைப் பாடுகிறார் தனுஷ்.
அவருடன் அந்தப் பாட்டுக்கு, ஒரு பக்கம் முகம் முழுக்க கேக் க்ரீம் பூசிக் கொண்டு மதுக்கிண்ணத்தை ஏந்திபடி தமன்னாவும், இன்னொரு பக்கம் நடிகை பூனம் பாஜ்வாவும் ஆட்டம் போடுகிறார்கள்.
யுட்யூபிலும், பேஸ்புக்கிலும் இப்போது ஹாட்டான டாபிக் இந்த வீடியோதான்!

16 டிசம்பர் 2011

நோர்வேயில் பாலை.

ஊடகங்களில் பெரிதும் பாராட்டப்பட்ட தமிழ்ப் படமான ‘பாலை’, இந்தியாவுக்கு வெளியே உலகிலேயே முதல்முறையாக நார்வே நாட்டில் திரையிடப்படுகிறது.
சங்க கால தமிழர்களின் வாழ்க்கை, போர்முறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பாலை. தமிழீழ மக்களின் போராட்ட வரலாற்றின் கருமையையும் இந்தப் படம் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படம் தமிழகத்தின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே வெளியானது.
பாலையை இப்போது சர்வதேச அரங்கில் கொண்டுபோகும் முயற்சி நடக்கிறது. முதல் முறையாக நார்வேயில் பாலை படத்தை வெளியிடுகிறார்கள். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள ஃபில்மென்ஸஸ் கினோ அரங்கில் இந்தப் படம் வரும் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.
நார்வே தமிழரான வசீகரன் சிவலிங்கத்தின் விஎம் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனமும், அபிராமி கேஷ் அண்ட் கேரி நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை நார்வேயில் வெளியிடுகிறது.

12 டிசம்பர் 2011

அசினை ரஜனி ஜோடியாக்கக் கூடாது.

மலையாள நடிகையான அசின், கோச்சடையான் படத்தில் நடிக்கக் கூடாது. மீறி நடிக்க வைத்தால் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி மிரட்டியுள்ளது.
ரஜினி நடிக்க கோச்சடையான் என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. ரஜினியின் மகள் செளந்தர்யா இயக்குகிறார். இதில் ஜோடியாக நடிக்க யாரைப் போடலாம் என்று பெரிய டிஸ்கஷனே நடக்கிறதாம். சினேகாவைத் தங்கையாக நடிக்க வைக்கவுள்ளனர் என்று தகவல்கள் கூறின.
அதேசமயம், ஹீரோயினாக நடிக்க அசினை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அசினை நடிக்க வைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் கண்ணன் கூறுகையில், நடிகை அசின், தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் இலங்கை சென்று வந்தார். அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரை தமிழ் சினிமாப் படங்களில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என்று கோரப்பட்டது. ஆனால் நடிகர் சங்கம் குறுக்கிட்டுப் பஞ்சாயத்துப் பேசி அமைதியாக்கி விட்டது.
தற்போது முல்லைப்பெரியாறு பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மலையாள நடிகையான அசினை ரஜினி ஜோடியாக்க கூடாது. மீறி செய்தால் படப்பிடிப்புகளில் போராட்டம் நடத்துவோம். ரஜினி வீட்டிலும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தார்.
இதனால் அசினை கோச்சடையான் ஹீரோயினாக்க சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. ரஜினியின் தங்கையாக சினேகா நடிக்கவிருப்பதால் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை அனுஷ்கா தயங்கியதைத் தொடர்நதே அசினை கோச்சடையான் குழு அணுகியதாக ஒரு தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

10 டிசம்பர் 2011

ரஜனிக்கு ஜோடி அசின்?

கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அசினுடன் பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது.
ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையான், மோஷன் கேப்சரிங் முறையில் படமாக்கப்படும் 3 டி சினிமாவாகும். ரஜினி இதில் கோச்சடையான் என்ற பாண்டிய மன்னனாக வருகிறார்.
இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வந்தனர். அவர் 2012 வரை படுபிஸி என்பதால், கால்ஷீட் ஒதுக்க முடியாமல் திணறினார்.
இந்த நிலையில், இப்போது அசினுடன் பேச்சு நடப்பதாகத் தெரிகிறது. அசினுக்கு கைவசம் பெரிதாக படங்கள் ஏதுமில்லை. இந்தியல் ஒரு படம் ஒப்பந்தமாகியுள்ளார்.
எனவே அவர் ரஜினியுடன் நடிக்க தாராளமாக கால்ஷீட் தருவார் என்கிறார்கள்.
இந்தப் படத்தில் ரஜினி தங்கையாக நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை அமைக்கிறார்.
மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

06 டிசம்பர் 2011

ஆபத்தின்றி தப்பினார் பிரியாமணி!

கன்னடப் படப்பிடிப்புக்காக சென்றபோது காட்டுக்குள் நடந்த விபத்தில் சிக்கினார் பிரியாமணி ஆனால் அவர் காயமின்றி தப்பித்தார். படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.
பருத்திவீரன் புகழ் பிரியாமணிக்கு இப்போது கன்னடப் படவுலகம்தான் கைகொடுத்து வருகிறது.
அங்கு ஓரளவு வாய்ப்புகள் வருவதால் பெரும்பாலும் பெங்களூரில்தான் வாசம் செய்கிறார். தமிழில் அவருக்கு எந்த வாய்ப்பும் இல்லை.
சமீபத்தில் கன்னடப் படம் ஒன்றின் படப்பிடிபு்புக்காக கர்நாடகத்தில் உள்ள முத்தாநதி காட்டுக்கு காரில் சென்றார். அவருடன் மேக்கப் கலைஞர்களும் இருந்தனர்.
படப்பிடிப்பு நடந்த இடத்தை நெருங்கிய போது கார் திடீரென நிலை தடுமாறி அருகில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி நொறுங்கியது.
அருகாமையிலிருந்து பொதுமக்கள் ஓடிச்சென்று காருக்குள் இருந்த பிரியாமணியையும் மற்றவர்களையும் மீட்டனர். இந்த விபத்தில் பிரியாமணி காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்தால் படப்பிடிப்பு சில மணி நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் தாமதமாக வந்து சேர்ந்தார் ப்ரியாமணி. படப்பிடிப்பு பின்னர் தொடர்ந்தது.

04 டிசம்பர் 2011

நடிகையால் வந்தது குழப்பம்!

பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், இந்திய டி.வி.யின் பிக்பாஸ் டி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் ஆனார். இந்த நிலையில் அவர் இந்தியாவில் இருந்து வெளிவரும் எப்.எச்.எம். என்ற ஒரு பத்திரிகையின் டிசம்பர் மாத இதழுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தார். அதில் தனது வலது கையின் தோள்பட்டை அருகே பாகிஸ்தானின் உளவுத்துறை முத்திரையான ஐ.எஸ்.ஐ. என்று பச்சைகுத்தியுள்ளார்.
இந்த போட்டோ டூவிட்டர் மற்றும் பேஷ்புக் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது.
அவர் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை முத்திரையுடன் நிர்வாண போஸ் கொடுத்து இருப்பதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இதற்கிடையே, அந்த பத்திரிகைக்கு நான் நிர்வாண போஸ் கொடுக்க வில்லை என நடிகை வீணாமாலிக் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நான் ஆடையுடன்தான் கவர்ச்சி போஸ் கொடுத்தேன். ஆனால் அது நிர்வாணமாக மார்பிங் செய்து மாற்றி அமைத்து வெளியிடப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் டி.வி.க்கு பேட்டி அளித்துள்ளார்.
மேலும், தனது கையில் ஐ.எஸ்.ஐ. என்ற, பாகிஸ்தான் உளவுத்துறையின் முத்திரையை ஒரு நகைச்சுவை கலந்த வேடிக்கைக்காகதான் பச்சை குத்தியிருந்தேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் வீணாமாலிக் கூறியிருப்பதை பத்திரிகை நிர்வாகம் மறுத்துள்ளது.
வீணாமா லிக்குடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தான் அவரது நிர்வாணபடம் எடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ. முத்திரை தெரியாத வகையில் மிகவும் மெல்லியதாக தான் வரைந்தோம். ஆனால் வீணாமாலிக்தான் அதை மிகவும் பெரிதாக வரையும்படி கேட்டுக் கொண்டார் என கூறப்பட்டுள்ளது.
வீணாமாலிக் நிர்வாண படம் குறித்து பாகிஸ்தானின் பழமைவாத மதகுரு மவுலானா அப்துல் குவாய் கூறும்போது, வீணாமாலிக்கின் செயல் அனைத்து முஸ்லிம்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் கருத்து தெரிவிக்கையில், முதலில் அந்த படம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.