பக்கங்கள்

08 செப்டம்பர் 2019

பிரபல நடிகர் ராஜசேகர் காலமானார்!

தமிழ் திரைப்பட இயக்குநரும் பிரபல நடிகருமான ராஜசேகர் காலமானார். 'பாலைவனச் சோலை' படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களான ராபர்ட் - ராஜசேகரில் ஒருவர் இயக்குநர் ராஜசேகர். இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். பாரதிராஜாவின் 'நிழல்கள்' படத்தில் 4 ஹீரோக்களில் ஒருவராக நடித்துள்ளார் ராஜசேகர். இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலில் நடித்திருப்பார் ராஜசேகர். ராபர்ட்டுடன் இவர் இணைந்து, ரபார்ட் - ராஜசேகர் என்ற பெயரில், 'மனசுக்குள் மத்தாப்பூ', 'சின்னப்பூவே மெல்லப் பேசு', 'தூரம் அதிகமில்லை', 'பறவைகள் பலவிதம்', 'தூரத்துப் பச்சை', 'கல்யாணக் காலம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் ராஜசேகர். சினிமா மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்து வந்தார். துண்டிக்கப்பட்டிருப்பது தொடர்பு மட்டும்தான்; நிலாவுமன்று.. எழுக நிலாவைத் தொடுக! வைரமுத்து ஆறுதல்! குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் இவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. சின்னத்திரை சங்கங்களிலும் பொறுப்பு வகித்து வந்தார் ராஜசேகர். அண்மைக்காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ராஜசேகர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். ராஜசேகரின் திடீர் மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

10 ஜூன் 2019

கிரேஸி மோகன் காலமானார்!

தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் முத்திரை பதித்த கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 67. நாடக ஆசிரியரான இவர் பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். மெக்கானிக் எஞ்சினியரிங் படித்தவர். ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோதே, நடுநடுவே நாடகங்களை போடுவார். அப்படி இவரது நாடகத்தை பார்க்க வந்த, இயக்குனர் சிகரம் பாலசந்தர் பாராட்டி தள்ளி விட்டார். அதுதான் சினிமாவுக்குள் கிரேஸியை உள்ளே புகுத்தியது. பொய்க்கால் குதிரை படம் மூலம் சினிமா பயணம் தொடங்கியது. கமல்ஹாசன் "டேக் திங்ஸ் ஈஸி... லைஃப் இஸ் கிரேஸி.." இதுதான் கிரேஸி மோகனின் தாரக மந்திரம். அது அவரது பேச்சு, எழுத்து எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும். படங்களில் காமெடி இருக்கும். ஆனால் காமெடியையே ஒரு முழு படமாக எழுதும் திறமை கிரேஸிக்கு மட்டுமே உண்டு. இதனை மிக சரியாக பயன்படுத்தி கொண்டவர் கமல்ஹாசன்தான்! வசனகர்த்தா இதற்கு அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியதே சாட்சி! ட்ரேட் மார்க் லட்சக்கணக்கானோர் மனதுக்கு பிடித்தமான கிரேஸி மோகன் அற்புதமான மனிதர் மட்டுமல்ல.. காயம்பட்ட இதயத்துக்கு மருந்தானவரும்கூட. ரொம்ப வேகமாக வேகமாக பேசுவார்.. எப்பவுமே இவரது பேச்சில் ஒரு ஸ்பிரிட் இருக்கும். வெத்திலை - பாக்கு - சீவல்தான் இவரது ட்ரேட் மார்க்!ஒரு காமெடியை பார்த்து சிரித்து முடிப்பதற்கு முன்பேயே இன்னொரு காமெடி வந்து நம்மை திக்குமுக்காட செய்வதுதான் கிரேஸியின் டச்&பஞ்ச்! கடந்த சில வருடங்களாக இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்பட்டது. எனினும் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளாமல் இருந்தார்,இந்நிலையில், தீவிர கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கவலைக்கிடமான நிலையில் அவர் உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபலங்களும், பொதுமக்களும் கிரேஸி மோகன் உடல்நலம் பெற்று வர வேண்டும் என்று இணையத்தில் ட்வீட்கள், கமெண்ட்கள் போட்டு பிரார்த்தனை செய்து வந்தனர். கமலஹாசன் கிரேஸி மோகன் சீரியஸ் என்ற தகவலை கேட்டதும் கமல்ஹாசன் நேரடியாக ஆஸ்பத்திரிக்கே சென்றுவிட்டார். அங்கு அவரது உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். எனினும், தீவிர சிகிச்சை அளித்தும் அது பலனின்றி கிரேஸி மோகன் காலமானார். இந்த தகவலை கேட்டதும், சினிமா, நாடக உலகமே பெரும் சோகம் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளது. மணம் வீசும் கிரேஸி மோகன்.. எத்தனையோ பேரின் மன பாரத்தை குறைத்தவர்.. தன் அசால்ட் வார்த்தைகளால் டென்ஷன், பிரஷரை தூக்கி தூக்கி எறிய செய்தவர். இது பலருக்கும் கிடைத்திராத ஒரு அரிய வரப்பிரசாதமே! அவரது நாடகங்கள், கமெடிகள், வசன தெறிப்புகள் எல்லாமே அவரது வெற்றிலை, பாக்கு, சீவல் போல காலங்காலத்துக்கும் நின்று மணம் வீசும்!

02 ஏப்ரல் 2019

பிரபல இயக்குனரும் நடிகருமான மகேந்திரன் மறைந்தார்!

Tamil cinema director Mahendran passes away பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார். அவருக்கு வயது 79. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் மகேந்திரன். காலம் கடந்தும் பெயர் சொல்லக்கூடிய பல்வேறு திரைப்படங்களை அவர் தமிழ் கூறும் நல் உலகிற்கு வழங்கியவர்.மகேந்திரனின் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, மெட்டி போன்ற திரைப்படங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் பசுமையாக நிழலாட கூடியவை. அந்த காலகட்டத்தில் இவை புதிய பரிணாமத்தை வழங்கிய திரைப்படங்களாக பார்க்கப்பட்டன. சமீப காலத்தில் நடிகராகவும் அவர் ஜொலிக்க ஆரம்பித்து இருந்தார். விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த தெறி திரைப்படம், ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேட்ட, உதயநிதி நடித்துள்ள நிமிர் போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மகேந்திரன் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் மகேந்திரனுக்கு சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டதால், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அவரது உயிர் பிரிந்தது. தமிழ் திரையுலகத்திற்கும், ரசிகர்களுக்கும் மகேந்திரனின் இறப்பு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.