சில்க் ஸ்மிதா கதையை தழுவி உருவாகியுள்ள நடிகையின் டைரி படம் விரைவில் திரைக்கு வருகிறது.இதில் சில்க் வேடத்தில் சனா கான் நடித்துள்ளார். மலையாளத்தில் சில்க் கதையை கிளைமாக்ஸ் என்ற பெயரில் அனில் இயக்குகிறார்.இதில் சனா கான் நடிக்கிறார்.அதே படம் தமிழில் Ôநடிகையின் டைரிÕ பெயரில் ரிலீசாக உள்ளது. டிஜிட்டல் என்டர்டெய்னர் ஹெச்.ஏ.கே. தயாரித்துள்ளார். இப்படத்தில் பாடல்களை எழுதி, நிர்வாக தயாரிப்பு பொறுப்பை Ôசிலந்தி¤Õஇயக்குனர் ஆதிராம் ஏற்றுள்ளார். அவர் கூறியதாவது, சில்க் கதை என்ற பெயரில் பலர் படம் எடுக்கிறார்கள். ஆனால் அவையெல்லாம் அவரது வாழ்க்கை கதை படங்கள் அல்ல. சில்க் ஸ்மிதா முதலில் மலையாளத்தில்தான் நடித்தார்.அவரை மலையாளத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் ஈஸ்ட்மென் ஆண்டனி.சில்க் பற்றி அறிந்தவர்.அவரே இப்படத்துக்கு கதை எழுதியுள்ளார்.கேரளா,ஆந்திரா தவிர மற்ற இடங்களில் தமிழில் இப்படத்தை வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளேன்.வெறும் கவர்ச்சியை நம்பி இப்படம் எடுக்கப்படவில்லை.கனமான திரைக்கதை இதில் இருக்கும்.
31 மார்ச் 2013
28 மார்ச் 2013
நயன்தாராவுடனான என் நட்பு உண்மைதான்!
சினிமாவில் எந்த நடிகையுடனும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக நயன்தாராவுடன் பழகி வருவது உண்மைதான். ஆனால் அது திருமணமாக மாறுமா என்றெல்லாம் சொல்ல முடியாது என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். கடந்த சில வாரங்களாக சினிமா உலகில் அதிகம் கிசுகிசுக்கப்படுவது நயன்தாரா - ஆர்யா நெருக்கம்தான். நயன்தாரா ஏற்கெனவே சிம்பு, தனுஷ், பிரபுதேவா ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். சிம்பு - நயன் காதல் மற்றும் மோதல் ரொம்ப பிரபலம். அதேபோல, நயன்தாராவை திருமணம் செய்ய தன் மனைவியை விவாகரத்து செய்தவர் பிரபு தேவா. ஆனால் அந்தக் காதலும் முறிந்துவிட்டது. இப்போது நயன்தாராவின் புதிய காதலன், அதையும் தாண்டி திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் என ஆர்யாவைக் குறிப்பிடுகிறார்கள். இதுகுறித்து ஆர்யாவே இப்போது மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், "நானும் நயன்தாராவும் நெருங்கிப் பழகுவது உண்மைதான். இந்த இன்டஸ்ட்ரியில் எனக்கு ஏகப்பட்ட நடிகைகளுடன் நல்ல பழக்கம் உள்ளது. ஆனால் அதையெல்லாம் தாண்டி, நெருக்கமான உறவு நயன்தாராவுடன் உள்ளது. அவருடன் பல தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. எங்கள் உறவு பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு எல்லாம் பதில் சொல்வது கஷ்டம்.எங்கள் நட்பின் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்தெல்லாம் இப்போது சொல்ல முடியாது,"என்றார்.
26 மார்ச் 2013
நடிகை சுகுமாரி மரணம்!
பிரபல திரைப்பட நடிகை சுகுமாரி சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. நாகர்கோவிலில் கடந்த 1940 ஆம் ஆண்டு பிறந்த சுகுமாரி, தமிழில் ஓரிரவு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் ஏ பீம்சிங்கை திருமணம் செய்து கொண்ட சுகுமாரிக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். பாசமலர், பட்டிக்காடா பட்டணமா உள்ளிட்ட 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
இதில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்கள் அடங்கும். நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ள சுகுமாரிக்கு, கடந்த 2003 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இது தவிர தேசிய திரைப்பட விருது, கேரள மாநில அரசின் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். திரையுலகில் புகழுடன் வலம்வந்த லலிதா,பத்மினி, ராகினி சகோதரிகளின் உறவினராவார் சுகுமாரி.
தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்.மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். சுகுமாரியின் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பொன்னான இதழ்கள் புண்ணாகலாமா?
முத்தக் காட்சியில் அஞ்சலியின் உதட்டை காயப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஆர்யா.
ஜெயம் கொண்டான் திரைப்பட இயக்குனர் கண்ணனின் அடுத்தப் படைப்பாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சேட்டை'. இதில் ஆர்யா நாயகனாகவும், ஹன்சிகா, அஞ்சலி நாயகிகளாகவும் நடிக்கின்றனர். படத்தில் இரண்டு லிப் லாக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. காட்சிப்படி ஆர்யா, ஹன்சிகாவுக்கும், அஞ்சலிக்கும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்க வேண்டும். இந்நிலையில் ஹன்சிகாவுடனான லிப் லாக் காட்சியில் 6 முறை டேக் எடுத்த ஆர்யா அஞ்சலியுடனான லிப் லாக் காட்சியில் 15 முறை டேக் எடுத்திருக்கிறார்.
இதனால் சற்று கோபமடைந்த அஞ்சலி, உதடு புண்ணாகிவிட்டது என நேரடியாக இயக்குனரிடம் கூறியுள்ளார். ஒரு வழியாக இக்காட்சியை எடுத்து முடித்ததும் அடுத்த இரண்டு நாட்கள் படப்பிடிப்பிற்கு வராமல் விடுமுறை எடுத்துக்கொண்டார் அஞ்சலி.
05 மார்ச் 2013
மூத்த நடிகை ராஜசுலோசனா மரணம்!
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளுள் ஒருவரான ராஜசுலோசனா இன்று சென்னை மடிப்பாக்கத்தில் காலமானார். அவருக்கு வயது 77. தமிழகத்தின் பெருமைமிக்க கலைஞர்களான மறைந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன், தெலுங்கில் என்டிஆர், கன்னடத்தில் ராஜ்குமார் என சாதனையாளர்களுடன் நடித்தவர் ராஜசுலோசனா. 1935-ம் ஆண்டு, அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்த பெஜவாடாவில் பிறந்தவர் ராஜசுலோசனா. அவரது இயற்பெயர் ராஜீவலோசனா. அதைத்தான் பின்னர் சினிமாவுக்காக ராஜசுலோசனா என மாற்றிக் கொண்டார். 1953-ல் அவர் நடித்த முதல் படம் குணசாகரி வெளியானது. தொடர்ந்து அவர் நடித்த ரங்கோன் ராதா, அம்பிகாபதி, சாரங்கதாரா தாய் மகளுக்குக் கட்டிய தாலி, கவலை இல்லாத மனிதன், அரசிளங்குமரி, நல்லவன் வாழ்வான் போன்ற படங்கள் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. எழுபதுகளில் அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். எம்ஜிஆரின் இதயக்கனியில் அவரது வேடம் பெரிதும் பேசப்பட்டது. ரஜினி நடித்த காயத்ரி, கமல் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்கள் வரை நடித்த ராஜ சுலோசனா, சென்னை மடிப்பாக்கத்தில் சதாசிவ நகரில் வசித்து வந்தார். புஷ்பாஞ்சலி நிருத்ய கலா கேந்திரம் என்ற பெயரில் நடனப் பள்ளி ஒன்றை நடத்திய ராஜ சுலோச்சனா, ஏராளமானோருக்கு நடனமும் கற்றுத் தந்துள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை அவரது இல்லத்தில் மரணமடைந்தார் ராஜசுலோசனா. நாளை மார்ச் 6-ம் தேதி அவரது இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. மூத்த நடிகையான ராஜசுலோசனா மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)