பக்கங்கள்

30 நவம்பர் 2012

நண்பர்கள் கவனத்திற்கு!

கே.ஜெயக்குமார் என்பவர் இயக்கும் படம்தான் நண்பர்கள் கவனத்திற்கு. இப்படத்தில் சஞ்சீவ் நாயகனாக நடிக்கிறார். மனீஷாஜித் நாயகியாக நடிக்கிறார். அதேபோல இன்னொரு நாயகனாக வர்ஷன் என்பவரும் தலை காட்டுகிறார்.கம்பீரம் படம் பார்த்திருப்பீர்கள். அதில் சரத்குமாரின் மகளாக ஒரு குட்டிப் பாப்பா நடிப்பிலும், பேச்சிலும் வெளுத்துக் கட்டியிருப்பார். அந்த பேபி நடிகைதான் இந்த மனீஷாஜித். குமரியான பின்னர் முதல் முறையாக ஹீரோயின் அவதாரம் எடுக்கிறார்.இப்படத்தில் நாயகியாக நடிக்கும் மனீஷாஜித் நடிப்போடு, கவர்ச்சியையும் சரிவிகித சமானத்தில் கலந்து தரத் தயாராக இருக்கிறாராம். அதேசமயம் முழுமையான கவர்ச்சிக்கு இவர் உடன்பட மாட்டாராம்.ஏற்கனவே சரத்குமாரின் ஒரிஜினல் மகள் வரலட்சுமி சிம்புவுடன் ஜோடி போட்டு ஹீரோயினாகி விட்டார். அடுத்து விஷாலுடன் ஜோடி சேரப் போகிறார். இந்த நிலையில், தற்போது சரத்குமாரின் மகளாக நடித்த மனீஷாஜித்தும் ஹீரோயினாகி விட்டார்.இந்தப் படம் நண்பர்கள் பற்றிய கதையாம். அதனால் ஏற்படும் உணர்வுப் போராட்டத்தைத்தான் படத்தில் சொல்லியுள்ளார்களாம்.

11 நவம்பர் 2012

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ப்ரியா ராய்?

இந்தியாவின் அதிகம் விமர்சனத்துக்குள்ளாகும் டிவி ரியாலிடி ஷோ என்ற இடத்தைப் பிடித்தது "பிக் பாஸ்” நிகழ்ச்சி. இப்போது இந்த நிகழ்ச்சிக்கு கொஞ்சம் கவர்ச்சி கூட்டப்பட்டிருக்கிறது. பிரபல 'ஆபாச’ நட்சத்திரமான பிரியா ராய், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவார் என்று கூறப்படுகிறது. சென்ற வருடம் சல்மான் கான் கிளப்பிய சர்ச்சைகளுக்குப் பின்னர், இந்த நிகழ்ச்சியின் குடும்ப அங்கத்தினருக்கான ஆறாவது பாகத்தில் நிச்சயம் கலந்து கொள்வேன் என்று கூறியிருந்தார். ஆனால், அதன் பிறகான டிஆர்பி ரேட்டிங்கில் இந்த பாகம் பெரும் வரவேற்பு பெறவில்லை. இதை அடுத்து நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மிகவும் யோசித்து, பிரியா ராயைக் கொண்டு வர தீர்மானித்தனராம். அவர்களின் தகவல் படி, பிரியா ராய் இந்த நிகழ்ச்சியில் ஒரு விருந்தினராகத் தலைகாட்டுவாராம். பிரியா ராய், அவருடைய 2 வயதில், பெற்றோரால் கைவிடப்பட்டு பின்னர் அமெரிக்க தம்பதியால் எடுத்து வளர்க்கப்பட்டவர்.

07 நவம்பர் 2012

கவலையில்லாத சமீரா!

படங்களில் வாய்ப்பு குறைவதால் கவலை இல்லை என்றார் சமீரா ரெட்டி. ‘வாரணம் ஆயிரம்’, ‘வெடி’ உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை சமீரா ரெட்டி. அவர் கூறியதாவது: ராணா, நயன்தாரா நடிக்கும் தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறேன். இந்த வாய்ப்பை ஏற்றது ஏன் என்கிறார்கள். குத்து பாடலுக்கு மட்டும் ஆட வேண்டுமென்றால் ஆடி இருக்க மாட்டேன். கதையோடு சேர்ந்து வரும் பாடலாக இது அமைந்திருக்கிறது. என்னுடன் வெங்கடேஷும் ஆட உள்ளார். இதுவொரு கவுரவ தோற்றம் என்பதால் ஏற்றேன். இந்தி படங்களில் கரீனா கபூர், கேத்ரினா, வித்யா பாலன் ஆகியோரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள். அதெல்லாம் ஹிட்டாகி இருக்கிறது. இந்தியில் எனக்கும் நிறைய வாய்ப்புகள் வந்தன. அவைகளில் தேசிய விருது இயக்குனர் பிரகாஷ் ஜா படத்தில் வந்த வாய்ப்பை மட்டும் ஏற்றேன். ‘டோலிவுட் படங்களில் ஹீரோயின்கள் கிளாமருக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்களே?’ என்கிறார்கள். ஹீரோக்கள் ஆதிக்கம் உள்ள படவுலகில் அப்படித்தான் இருக்கும். இதை மாற்றுவதற்காக நான் வரவில்லை. கிளாமர் வேடங்களை நான் தவிர்ப்பதில்லை. படங்களில் வாய்ப்பு குறைந்துவிட்டதுபற்றி கவலைப்படுவதில்லை. சொல்லப்போனால் நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதில் பிடித்ததை மட்டுமே ஏற்கிறேன். விரைவில் குடும்பத்தினருடன் கிரிஸுக்கு செல்ல உள்ளேன். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.