கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இவ்விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு சண்டை காட்சி படமாக்கப்பட்டது.அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இதில் கிரேனில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே 3 சண்டை கலைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.