சசிகுமாரின் மேனேஜர் அசோக் குமார் தற்கொலைக்குக் காரணமான பைனான்சியர் - தயாரிப்பாளர் மதுரை அன்புச் செழியனைக் கைது செய்யக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர் இயக்குநர்கள் சசிகுமார், அமீர் மற்றும் சமுத்திரக் கனி ஆகியோர். 40 வயதான அசோக்குமார் இன்று அபிராமபுரத்தில் உள்ள தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திரையுலகில் அவரை பெரும்பாலானோருக்கு நன்கு தெரியும் என்பதால், அசோக்கின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. சசிக்குமாரின் அத்தை மகன்தான் அசோக் குமார். சசிக்குமாருடன் இணைந்து செயல்பட்டு வந்தார். கந்து வட்டிக்கு அவர் தற்கொலை செய்திருப்பது திரையுலகை உலுக்கியுள்ளது.தனது தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் என்று பைனான்சியர் மதுரை அன்புச் செழியனைக் குறிப்பிட்டுள்ளார். அவரது சித்திரவதை தாங்காமல்தான், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டதாக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் தனது கடிதத்தில்.இதைத் தொடர்ந்து அன்புச் செழியனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று இயக்குநர்கள் சசிகுமார், அமீர், சமுத்திரக் கனி உள்ளிட்டோர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.தற்கொலை செய்து கொண்ட மேனேஜர் அசோக்குமார், கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் மற்றும் இணை தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.அசோக்குமாரின் மரணத்தை தமிழ்த் திரையுலகம் எப்படி கையாளப் போகிறது என்பது தெரியவில்லை. மேலும் அன்புச் செழியன் மீது புகார்கள் வருவது முதல் முறையல்ல என்பதால் இந்தமுறையாக உறுதியான நடவடிக்கையில் அது இறங்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
21 நவம்பர் 2017
15 அக்டோபர் 2017
மன அழுத்தத்தால் பாதிப்பு-தீபிகா படுகோனே!
பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன், தான் கடந்த காலத்தில் மன அழுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக சமீபத்தில் மனந்திறந்து சொல்லியிருந்தார்.
அவர் அந்த மனஅழுத்தத்தில் இருந்து மீண்டு விட்டாரா என்று கேட்டபோது, “நான் மன அழுத்தத்தில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. மன அழுத்தம் மீண்டும் என்னைத் தாக்குமோ என்ற பயம் இன்றும் மனதின் ஓரத்தில் இருந்துகொண்டிருக்கிறது. அவ்வளவு மோசமான அனுபவம் அது” என்கிறார்.
‘இப்படி நீங்கள் உங்களின் மனஅழுத்தம் பற்றி வெளிப்படையாகப் பேசுவதால் உங்களின் படவாய்ப்புகள் பாதிக்கப்படுமா?’ என்ற அடுத்த கேள்விக்கு தீபிகா, “எனக்கு மனஅழுத்தப் பிரச்சினை இருப்பதால் என்னால் நன்றாக நடிக்க முடியாது என்று சிலர் நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. திரையுலகைப் பொறுத்தவரை தற்போது நான் நல்லநிலையில் இருக்கிறேன். நான் நடிக்க விரும்பும் படங்களை சரியாக தேர்வுசெய்ய என்னால் முடியும். ஆனால் எல்லோராலும் அவ்வளவு தெளிவாக முடி வெடுக்க முடியுமா என்பது எனக்கு தெரியாது..” என்கிறார்.
மனநலத்தை ஒரு பாடமாக பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதும் தீபிகாவின் விருப்பமாக இருக்கிறது.
“பள்ளிகளில் பாடங்களுக்கு அடுத்து, உடற்கல்வி பற்றித்தான் பேசப் படுகிறது. நான் படித்த பள்ளியிலும் உடற்கல்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் மனநலத்துக்காக எந்த வகுப்பும் நடத்தப்படவில்லை. அது நமது பாடத் திட்டத்திலேயே இல்லை. உடல் நலத்தைப் போல மனநலத்தின் முக்கியத்துவத்தையும் நாம் உணர்ந்து, பள்ளிகளில் அதை அறிமுகப்படுத்தி யிருந்தால், பல்வேறு பிரச்சினைகளில் இருந்து நம்மால் எளிதாக தப்பிவிடலாம்” என்று கூறுகிறார்.
‘தி லிவ் லவ் லாப்’ என்ற அறக்கட்டளையையும் நிறுவி நடத்திவருகிற தீபிகா, “அரசின் கொள்கை வகுப்பாளர்களும், முக்கியப் பொறுப்பு வகிப்பவர்களும் மனநலத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், பரவலாக நிலவும் மனஅழுத்தத்தைக் குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மனஅழுத்தம் இருப்பவர்கள் அதைப் பற்றி வெளிப் படையாகப் பேச முன்வருவார்கள். ‘எங்கே நமது மனநலப் பிரச்சினையைப் பற்றிக் கூறினால் வேலை போய்விடுமோ?’ என்ற பயத்தில் இருப்பவர்களும் அதிலிருந்து விடுபடுவார்கள்” என்று தீபிகா யோசனை சொல்கிறார்.
தனது மனநலப் பிரச்சினை போராட்டம் தொடர்பாக வெளிப்படையாகப் பேசியது குறித்து தீபிகா கூறுகையில், “மனஅழுத்தத்தின் தாக்கங்கள் குறித்துப் புலம்ப வேண்டும் என்பது எனது ஆசையில்லை. மாறாக, மனநலம் சார்ந்த விஷயங்கள் குறித்து இந்தியாவிலும், உலகத்திலும் மக்களின் பார்வை மாற வேண்டும் என்பதே எனது ஆசை” என்று சொல்லி முடிக் கிறார்.
பலரும் பேசத் தயங்கும் விஷயம் பற்றி பேச முன்வந்ததற்காகவே தீபிகா படுகோனை பாராட்டலாம்.
30 செப்டம்பர் 2017
மனைவியை காரில் கட்டி சுற்றித்திரிந்த கணவன்!
காரின் முன் பக்கத்தில் மனைவியை கட்டிவைத்து கணவன் காரை வேகமாக ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரானில் கணவனுக்கும் மனைக்கும் ஏற்பட்ட சண்டையில் மனைவிக்கு தண்டனை கொடுக்கும் விதமாக கணவன் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன், மனைவி இருவருடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன், மனைவிக்கு தண்டைனை கொடுக்கும் விதமாக வினோத செயலில் ஈடுபட்டார்.மனைவியை காரின் முன் பக்கத்தில் கட்டிவைத்து, காரை சாலையில் மிக வேகமாக ஓட்டிச் சென்றார். காரில் முன்பக்கத்தில் தொங்கியபடி இருந்த பெண் பாதியில் வழியில் கிழே விழுந்து படுகாயம் அடைந்தார். தற்போது அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
27 ஜூலை 2017
நகம் கடித்தல் மனநோய்க்கான அறிகுறியா?
பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதனை சாதாரணமான ஒன்றாகதான் நினைக்கிறோம் ஆனால் அது ஒரு வகையான மன நோய் எனக் கூறப்படுகிறது.
நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பின்னர் பருவ வயதில் இப்பழக்கம் தானாய் மறைந்து போகும். குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் இவ்வாறு நகம் கடிக்கும் பழக்கம் ஒருவருக்கு தொடரலாம். நகம் கடித்தல் மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது. நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப்பின் வெளிப்பாடுதான் என்று கூறப்படுகிறது. மன ரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் நகம் கடித்தல் கெடுதல் விளைவிக்கும். விரல் நுனிகளில் அழுக்குகள் இருக்கும். நகங்களைக் கடிக்கும் போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும். இதனால் எளிதில் நோய்த் தொற்று ஏற்படும். எனவே நகம் கடிக்கும் பழக்கத்தை உடையவர்கள் அதிலிருந்து விடுபடுவது நன்மை தரும்.
நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பின்னர் பருவ வயதில் இப்பழக்கம் தானாய் மறைந்து போகும். குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் இவ்வாறு நகம் கடிக்கும் பழக்கம் ஒருவருக்கு தொடரலாம். நகம் கடித்தல் மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது. நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப்பின் வெளிப்பாடுதான் என்று கூறப்படுகிறது. மன ரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் நகம் கடித்தல் கெடுதல் விளைவிக்கும். விரல் நுனிகளில் அழுக்குகள் இருக்கும். நகங்களைக் கடிக்கும் போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும். இதனால் எளிதில் நோய்த் தொற்று ஏற்படும். எனவே நகம் கடிக்கும் பழக்கத்தை உடையவர்கள் அதிலிருந்து விடுபடுவது நன்மை தரும்.
28 ஏப்ரல் 2017
வாணி ராணி நடிகை போட்ட சண்டை!(வீடியோ)
நடிகை ராதிகா தயாரித்து நடித்து வரும் வாணி ராணி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகையின், கள்ளக்காதல் அம்பலமாகியுள்ளது.அந்த தொடரில் ஒரு முக்கிய வில்லி வேடத்தில் நடித்து வருபவர் நடிகை சபீதாராய். அதேபோல், ராதிகாவின் ரேடான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மேனஜரான சுகுமாறன். இவர், சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிறுப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவரோடு, நடிகை சபீதாராய் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். என்னை நீதானே வர சொன்னாய்.. பணம் கொடுக்கிறேன் எனக்கூறினாயே.. கொடு..எனக்கூறி அவரிடம் சண்டை போட்டார். ஒரு கட்டத்தில் சுகுமாறனை தாக்கவும் செய்தார். அவரின் சட்டையை கிழித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுகுமாறன், பதிலுக்கு அவரை தாக்கினார்.
அதாவது, சுகுமாறனின் மனைவி வெளியூர் சென்று விட்டதால், நடிகை சபீதாராயை வீட்டிற்கு வரவழைத்து கடந்த 2 நாட்களாக உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால், அவருக்கு கொடுப்பதாக கூறிய பணத்தை தரவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சபீதாராய், சுகுமாறனிடம் சண்டையிட்டது தெரிய வந்துள்ளது.
வாணி ராணி தொடரில் கூட இருந்தே குழி பறிப்பது, மற்றவர்களை பற்றி போட்டுக் கொடுப்பது, குழந்தை கடத்தலில் ஈடுபடுவது போன்ற கதாபாத்திரத்தில் சபீதாராய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் சின்னத்திரை நடிகர், நடிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
05 மார்ச் 2017
கைத்தொலைபேசிகளில் அதிகளவு கிருமிகள்!
நம் அன்றாட வாழ்வில் ஒன்றான ஸ்மார்ட்போன்களில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் உயிர் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் மற்றும் பாக்டீரியா உள்ளிட்டவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு கிருமிகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கழிவறைகளில் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று வகையான கிருமிகள் மட்டுமே இருக்கும். ஆனால் ஸ்மார்ட்போன்களில் சராசரியாக 10 முதல் 12 வகையான கிருமிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில கிருமிகள் எவ்வித கிருமி நாசினிகளாலும் அழிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
13 பிப்ரவரி 2017
சசிகலாவால் தனிமைச்சிறையில் கருணாஸ்?
கூவத்தூரில் அடைபட்டிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களில் பலர் கடும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் நடிகர் கருணாஸை தனியாக ஒரு அறையில் வைத்துள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூவத்தூர் ரிசார்ட்டில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏன் அங்கு அடைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களின் உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்குமே கூட என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.
அங்கு அது நடக்கிறது, இது நடக்கிறது என்ற செய்திகள்தான் வருகிறதே தவிர எம்.எல்.ஏக்களின் நிலை என்ன என்று யாருக்குமே தெரியவில்லை. இந்த நிலையில் இன்று ஒரு ஆம்புலன்ஸ் வேறு உள்ளே போயிருக்கிறது.இந்த நிலையில் நடிகர் கருணாஸ் கூவத்தூர் முகாமில் பெரும் குழப்ப மன நிலையில் உள்ளதாக ஒரு செய்தி உலா வருகிறது. அவர் கடும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாகவும், பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.கருணாஸ்தான் உள்ளே வந்தது முதல் பல்வேறு வகையான ஏற்பாடுகளை எம்.எல்.ஏக்களுக்கு செய்து வந்தார். பாட்டுப் பாடினார், டான்ஸும் ஆடினாராம். அவரது ஆட்டம் பலருக்கும் குஷியைக் கொடுத்து அவர்களையும் கூட ஆட வைத்ததாம்.ஆனால் இப்போது அவரை ஒதுக்கி ஓரம் கட்டி விட்டனராம் அதிமுக நிர்வாகிகள். அவரை தனியாக ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளனராம். அங்கிருந்து அவரை நகர அனுமதிப்பதில்லையாம். எந்த ஆலோசனைக்கும் அவரைக் கூப்பிடுவதில்லையாம்.கருணாஸ் மன நிலையில் மாற்றம் வந்து விட்டதாக சந்தேகம் வந்து விட்டதாம் மேலிடத்திற்கு. இதனால்தான் அவரை ஒதுக்கி விட்டனராம். மற்றவர்களுடன் அவரை கலந்து பேச விடுவதில்லையாம். எதிலும் கலந்து கொள்ள விடுவதில்லையாம். இதன் காரணமாக பெரும் மன வருத்தத்துடனும், குழப்பத்துடனும் உள்ளாராம் கருணாஸ்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)