பக்கங்கள்

29 மே 2016

நடிகை பிரியாமணி நிச்சயதார்த்தம்!

நடிகை பிரியாமணி-முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றுள்ளது. பருத்திவீரன் உட்பட ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் பிரியாமணி.இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இவர் வென்றார்.ஒரு கிரிக்கெட் போட்டியில் தொழில் அதிபரான முஸ்தபா ராஜை சந்தித்த பிரியாமணி விரைவில் அவரின் காதலியாக மாறினார். இதுகுறித்து பிரியாமணி "நாங்கள் இருவரும் உயிருக்குயிராக காதலிக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களது திருமணம் நடைபெறும்" என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரியாமணி-முஸ்தபாராஜ் நிச்சயதார்த்தம் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள பிரியாமணியின் வீட்டில் விமரிசையாக நடைபெற்றது.இதில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த வருட இறுதிக்குள் இருவரின் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ''நான் சினிமாவை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன். திருமணத்துக்கு பிறகும் நல்ல கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடிப்பேன்'' என்று சினிமா குறித்த கேள்விக்கு பிரியாமணி பதிலளித்திருக்கிறார். முன்னதாக மலையாள இளம் நடிகர்களில் ஒருவரான கோவிந்த் பத்ம சூர்யாவை, பிரியாமணி காதலிப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

20 மே 2016

காடையரை விரட்ட பேயாக மாறிய சிறுமி!

இந்தியாவின் டெல்லியில் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்க முயன்ற நபர்களிடமிருந்து சிறுமி மிக சாதுர்யமாக தப்பித்துள்ளார். இந்தியாவின் டெல்லியில் இரவு 10 மணியளவில் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி நடந்து சென்றுள்ளார். இவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு ஆண்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு சிறுமியை கடத்தி சென்றுள்ளனர். நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்து சிறுமி திடீரென பயங்கரமான குரலில் பேசியும், சிரித்தும் பேயை போன்று நடித்துள்ளார். இதனால் பயந்து போன ஒருவன் ஓட்டமெடுத்துள்ளான், குழப்பத்தில் நின்ற மற்றொருவனை பயமுறுத்துவற்காக குறித்த சிறுமி தன்னுடைய ரத்தத்தை முகத்தில் பூசிக் கொண்டு மிரட்டியுள்ளார், இவனும் பயந்து போய் ஓட்டமெடுத்துள்ளான். இந்த சம்பவம் பற்றி குறித்து சிறுமியின் தோழி முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார் என சொல்லப்படுகின்றது.