பிரபல இஸ்லாமிய பாடகரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார பாடகராக கம்பீரக் குரலில் முழங்கியவருமான "இசைமுரசு" நாகூர் ஹனீபா (வயது 90) சென்னையில் இன்று காலமானார். இஸ்லாமிய பாடல்களை உலகம் முழுவதும் ஒலிக்கச் செய்தவர் நாகூர் ஹனீபா. குறிப்பாக இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் அனைவரையும் கொள்ளை கொண்ட பாடல். இஸ்லாமிய மத பாடல்களை உலகம் முழுவதும் ஒலிக்கச் செய்தவர் நாகூர் ஹனீபா. குறிப்பாக இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் அனைவரையும் கொள்ளை கொண்ட பாடல்.அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார பாடகராக ஹனீபா பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து தமது பாடல்கள் மூலம் தி.மு.க. வளர்ச்சிக்கு உரமாக இருந்தவர் ஹனீபா. அதுவும் அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா..... ஓடி வருகிறான் உதயசூரியன் போன்ற எண்ணற்ற பாடல்கள் தி.மு.க. கழகத்தின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாதவை. 90 வயதான நிலையில் முதுமை காரணமாக சென்னை கோட்டூர்புரத்தில் இன்று நாகூர் ஹனீபா காலமானார். அவரது உடலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.