பக்கங்கள்

24 அக்டோபர் 2014

மறைந்த எஸ்.எஸ்.ஆரின் தீவிர ரசிகை லதா ரஜனி!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்க அவரது மனைவி லதா ரஜினிகாந்த், பழம்பெறும் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் தீவிர ரசிகையாம். இதை அவரே எஸ்.எஸ்.ஆரிடம் கூறியுள்ளார். லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் வாழ்வில் சுவாரஸ்யங்களுக்கு குறைவிருக்காது. பெரியார், அண்ணாவின் சீடராக இருந்தது தொடங்கி இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் வரை அவரது வாழ்க்கையில் எண்ணற்ற சுவரஸ்ய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சில சம்பவங்களை எஸ்.எஸ்.ஆர் பிரபல ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் மறைந்தாலும் அவரது இனிய நினைவுகள் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறோம்.சிவலீலா' நாடகம் நடந்துட்டிருந்த சமயம் போய் "எனக்கு ஒரே வேடத்துல நடித்து அலுத்துவிட்டது. வேற பெரிய வேஷத்துல நடிக்க வையுங்க" என்று டி.கே.எஸ். சிடம் கேட்டாராம் எஸ்.எஸ்.ஆர். செண்பகப் பாண்டியனாக நடிக்க விரும்பம் என்று டி.கே.எஸ்.சிடம் சொன்ன உடன், ஆச்சரியப்பட்ட டி.கே.எஸ். அடுத்த நாடகத்துலேயே என்னை எஸ்.எஸ்.ஆரை ஹீரோவாக்கி மூணே முக்கால் ரூபாயிலயிருந்து 25 ரூபாய் சம்பளமாக உயர்த்தினாராம்.ரஜினி தன்னுடைய சஷ்டியப்தபூர்த்தி விழாவிற்கு எஸ்.எஸ்.ஆருக்கு அழைப்பு விடுத்துள்ளார். நீங்க ஃபங்ஷனுக்கு குடும்பத்தோடு வந்து என்னையும் லதாவையும் ஆசீர்வாதம் செய்யணும்' என்று கேட்டுக்கொண்டாராம். எஸ்.எஸ்.ஆர் தனது மனைவியுடன் ரஜினி மணிவிழாவுக்குப் போனபோது, ரஜினியும், லதாவும் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு நெகிழ்ந்து போனார்களாம். அப்போது ரஜினியின் கைகளில் 500 ரூபாயை கொடுத்தாராம் எஸ்.எஸ்.ஆர். அதை சந்தோஷமாக வாங்கிக் கொண்ட ரஜினி, 'இந்தப் பணத்தை செலவு பண்ணாம பத்திரமா உங்க ஞாபகமா வெச்சுப்பேன்...என்றாராம்.அப்போது, என் வீட்டுக்காரருக்கு எவ்வளவோ ரசிகர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் நான் உங்களுக்குத்தான் ரசிகை என்று கூறினாராம் லதா.கோபாலபுரத்தில் அடிக்கடி சென்று வந்த காலத்தில் சிறுவர்களாக இருந்த ஸ்டாலின், அழகிரி இடையே நடக்கும் சண்டையை விலக்கி விடுவாராம். சொல்வதை கேட்காவிட்டால் அழகிரியின் முதுகில் ஒரே போடாக போடுவாராம். இப்படி எத்தனையோ சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் எஸ்.எஸ்.ஆர்.