அது என்னமோ தெரியவில்லை… இந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மகன் நாமல் ராஜபக்சவுக்கு இந்திய நடிகைகள், குறிப்பாக தமிழ் நடிகைகள் மீது அப்படி ஒரு ஆசை…
நினைத்தால் டெல்லிக்கோ மும்பைக்கோ (இதுவரை சென்னைக்கு வரமுடியாத நிலை.. ஆனால் இனி அப்படியெல்லாம் சொல்வதற்கில்லை… ஓஎம்ஆரில் ஆடம்பர ஹோட்டலும் கோடம்பாக்கத்தில் அவருக்கான ஏஜென்டுகளும் தயார்!) சரி மேட்டருக்கு வருவோம்… இந்த நாமல் ராஜபக்சவும் பிரபல தமிழ் நடிகை ஒருவரும் ரொம்ப ரொம்ப நெருக்கமாக இருந்து டிஸ்கஸ் பண்ணிய சமாச்சாரத்தை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.
அந்த நடிகையும் இந்த நாமலும் அந்தரங்கமாக உள்ள வீடியோ வேறு முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்னொரு பிரபல நடிகையுடன் நமல் ரொம்ப நெருக்கமாக, அணைத்தபடி உள்ள படம் ஒன்று இணையத்தில் வெளியானது.
அந்த நடிகை சமீரா ரெட்டி. தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபலமானவர். தமிழில் வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி போன்ற படங்களில் நடித்தவர். இந்தப் படம் எடுக்கப்பட்ட இடம் தெரியவரவில்லை.
21 ஆகஸ்ட் 2014
08 ஆகஸ்ட் 2014
நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்!
பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் நேற்று சென்னையில் மரணமடைந்தார். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தவர் சுருளி மனோகர். கடந்த ஆண்டு ' இயக்குனர்' என்ற திரைப்படத்தை இயக்கினார்.கிங்காங், போண்டாமணி, ஜாஸ்பர், மனோபாலா, பாலு ஆனந்த், குண்டு கல்யாணம், பாண்டு, அல்வா வாசு, குள்ளமணி, பாவா லட்சுமணன், தேவதர்ஷினி, ஜெய்கணேஷ், ஜெயமணி என தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை பட்டாளத்தையே இந்தப் படத்தில் நடிக்க வைத்தார் சுருளி. இவர்களுடன் சுருளி மனோகர் ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்கவும் செய்தார். இந்நிலையில், சென்னையில் அவர் நேற்று மரணமடைந்தார். வெகு நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சுருளி மனோகர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துவிட்டார். மறைந்த சுருளி மனோகருக்கு, மூன்று மகள்கள் உள்ளனர். சுருளி மனோகர் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு தரப்பினரும், மற்றும் தொலைக்காட்சி நடிகர், நடிகைகளும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)