பக்கங்கள்

06 பிப்ரவரி 2014

விஜயின் ஜோடிக்கு காலில் காயம்!

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.நடிகை பிரியங்கா சோப்ரா குண்டே இந்தி படத்தில் தன்னுடன் நடித்த ரன்வீர் சிங் மற்றும் அர்ஜுன் கபூர் ஆகியோருடன் காமெடி நைட்ஸ் வித் கபில் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது தான் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்து தெரிய வந்தது.காமெடி நைட்ஸ் வித் கபில் நிகழ்ச்சிக்கு வந்த பிரியங்காவின் வலது காலில் பேன்டேஜ் இருந்தது. அவர் காயத்தை பொருட்படுத்தாமல் குண்டே விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.காலில் அடிபட்டிருந்தபோதிலும் அவர் அந்த நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடினார். அதுவும் ஹை ஹீல்ஸ் அணிந்து ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.காயமடைந்த முழங்கால், காயமடைந்த மனம், ம்ம்ம்ம்ம்ம் என்று பிரியங்கா சோப்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.காயம் ஏற்பட்டதால் ஓய்வு எடுக்காமல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பிரியங்கா டெல்லி சென்றார். ஐஸ் பையை முழங்காலில் வைத்துக் கொண்டே டெல்லி செல்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.விஜய் தான் என் முதல் ஹீரோ. அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன் என்று அண்மையில் ஒரு பேட்டியில் பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார். அதன்படி மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.விஜய்யும் சரி, பிரியங்காவும் சரி நன்றாக பாடுவார்கள். சிம்புதேவன் படத்தில் அவர்கள் சொந்தக் குரலில் டூயட் பாடி ஆடுவார்களா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.