பக்கங்கள்

20 ஜூன் 2013

வருந்துகிறார் கவிதா வர்மா!

கவிதா வர்மா 
போலிஸ்கிரி படத்தில் படு ஆபாசமாகவும், உடலில் சிலுவையை தொங்க விட்டும் போஸ் கொடுத்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் அப்படத்தில் குத்துப் பாட்டுக்கு நடித்திருந்த கவிதா வர்மா.விரைவில் வெளியாகவுள்ளது போலிஸ்கிரி படம்.மெகா பட்ஜெட் படமான இதில் கவிதா வர்மா கொடுத்திருந்த ஒரு போஸ் கிறிஸ்தவர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.இதற்காக கிறிஸ்தவ சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் கவிதா.அப்படி தான் தோன்றியது தவறுதான்,மன்னித்து விடுங்கள் என்று அவர் கோரியுள்ளார்.இந்தக் காட்சியில் ரோஸ் கலர் பிராவுடன், கழுத்தில் நீண்ட சங்கிலியில் சிலுவையைத் தொங்க விட்டும் காட்சி தந்திருந்தார் கவிதா.இந்த போஸைப் பார்த்து கிறிஸ்தவ சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தி விட்டார் கவிதா என்று குரல்கள் எழுந்தன.இதுதொடர்பாக கிறிஸ்தவ மதச்சார்பற்ற இயக்கம் என்ற அமைப்பு படத் தயாரிப்பாளர்களான அகர்வால், ராகுல் அகர்வால் ஆகியோரிடம் புகார் அளித்தது.சென்சார் வாரியத்திடமும் புகார் போனது. இதையடுத்து அந்த அமைப்பின் பிரதிநிதிகளை நேரில் வரவழைத்த தயாரிப்பாளர்கள்,நடிகை கவிதாவையும் உடன் வைத்துக் கொண்டு சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது கிறிஸ்தவ அமைப்பிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டாராம் கவிதா.நான் தெரியாமல்தான் நடித்து விட்டேன். எனக்கு இப்படி ஒரு பிரச்சினை வரும் என்று தெரியாது.மனதைப் புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு்க கொள்கிறேன் என்றார் கவிதா.