பக்கங்கள்

28 ஜூன் 2010

குளிக்கும் போது சேலை உடுத்திக்கொண்டா குளிப்பார்கள்?-ப்ரியா மணி.



கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ப்ரியாமணி. இதையடுத்து அது ஒரு கனாக்காலம், பருத்தி வீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்தார். அமீர் இயக்கத்தில் நடித்த பருத்தி வீரன் படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. ஆனாலும் கடந்த ஒரு வருடமாக தமிழில் கதாநாயகி வாய்ப்பு வரவில்லை. ராவணன் படத்தில் மட்டும் சிறு வேடத்தில் தலைகாட்டி விட்டு போனார். இப்போது தமிழ் சினிமாவில் அவருக்குப் படங்களே இல்லை. இதுகுறித்து ப்ரியாமணி கூறியது: பருத்தி வீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளியிட்டேன். அதற்காக தேசிய விருதும் கிடைத்தது. ஆனாலும் எனக்கு தமிழ்ப்பட வாய்ப்புகள் வரவில்லை. தமிழ்ப் பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என்ன நினைத்து இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று புரியவில்லை. நான் நிறைய வெற்றிப் படங்களில் நடித்துள்ளேன். ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வருவதில்லை. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. ராவணன் படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. மலையாளத்தில் வெளியான திரக்கதா படத்தில் எனக்கு விருது கிடைத்திருக்க வேண்டும். சொந்த குரலில் டப்பிங் பேசாததால் அந்த வாய்ப்பை இழந்தேன். ஏதோ நான் மட்டும்தான் கவர்ச்சியாக நடிப்பது போல பேசுகிறார்கள். எல்லா நடிகைகளுமே இப்போது கவர்ச்சியாகத்தானே நடிக்கிறார்கள்... நான் ஒருத்தி மட்டும்தானா பிகினி உடையில் நடித்திருக்கிறேன்? தெலுங்கில் துரோணா படத்தில் ஒரு கனவு காட்சியில்தான் அப்படி நடித்து இருக்கிறேன். எனது உடல் அமைப்புக்கு கவர்ச்சி உடை அணிவது பொருத்தமாக இருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சியில் நீச்சல் உடையைத்தான் அணிய வேண்டும். சேலை உடுத்திக் கொண்டா குளிப்பார்கள்...? என்கிறார்.

24 ஜூன் 2010

அப்பாவை பின்பற்றி நடிக்கும் நோக்கம் இல்லை.-சுருதி ஹாசன்.


"உலக நாயகன்' என்று அழைக்கப்படும் கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதி ஹாசன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் "7ஆம் அறிவு' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் முதன் முதலாக ஹந்தியில் நடித்து அறிமுகமான "லக்' என்ற படத்தில் இவரது நடிப்பு பரவலாகப் பேசப்பட்டாலும் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இப்போது, "7ஆம் அறிவு' படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேரப் போகும் ஸ்ருதி ஹாசனை அப்படத்தின் அறிமுக விழாவில் சந்தித்தபோது அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
தமிழ் படத்தில் நடிக்க முடிவெடுத்திருக்கிறீர்கள். அது குறித்து?
ஏ.ஆர்.முருகதாஸ் ஸார் இயக்கும் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறேன். காரணம் முருகதாஸ் ஸார் வித்தியாசமான இயக்குநர். அவரோட ஒவ்வொரு படங்களும் பேசப்பட்டிருக்கிறது. என் கேரியரில் இந்த மாதிரி ஒரு இயக்குநரோட, சூர்யா மாதிரியான ஒரு ஹீரோ கூட முதல் படம் பண்றது சந்தோஷமாக இருக்கிறது.
இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது இப்போதே என் மனசுக்கு தோன்றுகிறது. இந்தப் படத்தில் எனது திறமையை நிரூபிக்கும் வகையிலான பாத்திரம் அமைந்திருக்கிறது. அந்த வேடத்தை சிறப்பிக்க நிறைய உழைப்பேன்.
சூர்யா மற்றும் இயக்குநர் முருகதாஸ் குறித்து?
சூர்யா படத்துக்குப் படம் மாறுபட்ட நடிப்பை, ஸ்டைலை வெளிப்படுத்தி நடித்து வரும் சிறந்த நடிகர். என்னுடைய முதல் தமிழ்ப் படம் அவருடன் அமைந்ததில் ரொம்பவும் சந்தோஷப்படுகிறேன். வெறும் பாட்டு, கிளாமர் என்றில்லாமல் அற்புதமான கதையை வைத்து படம் இயக்குபவர் ஏ.ஆர்.முருகதாஸ். அவருடைய இயக்கத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன்.
இந்தப் படத்தில் நடிப்பது குறித்து உங்கள் அப்பா என்ன சொன்னார்?
அப்பாவிடம் ஆலோசனை மட்டும் கேட்டேன். மற்றபடி இந்தப் படத்தின் கதையை கேட்டது, அதில் நடிக்க முடிவெடுத்தது எல்லாம் என்னோட சாய்ஸ்தான்.

உங்கள் நடிப்பில் அப்பாவோட சாயல் இருக்குமா?
அப்பாவோட ஸ்டைல் எனக்கு வேண்டாம். அவர், அவருக்குன்னு ஒரு ஸ்டைலை வைத்திருக்கிறார். அதை ஃபாலோ பண்ண நான் விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை இன்ஸ்பிரேஷன்னு சொன்னால் அது என்னோட வாழ்க்கையும், எமோஷன்ஸýம்தான். சுருக்கமாக சொல்வதென்றால் நான்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.
"7ஆம் அறிவு' படத்தின் கதைக்களம் என்ன?
என்ன மாதிரி கதைக்களம் என்பதை சொல்ல முடியாது. அது சீக்ரெட். ஆனால் இந்தப் படம் வித்தியாசமான, இன்ட்ரஸ்டிங்கான ஒரு படமாக இருக்கும். இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட்டை படிக்கும்போதே அதில் ரொம்பவும் இம்பரஸ் ஆகி விட்டேன். இந்தப் படம் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக இருக்கும்.
பாலிவுட், ஹாலிவுட்டிலிருந்து வாயப்புகள் வந்தால் நடிப்பீர்களா?
என்னை பொறுத்தவரை நல்ல கதைக்கும், கேரக்டருக்கும்தான் முதலில் முக்கியத்துவம் கொடுப்பேன். அது எந்த மொழியாக இருந்தாலும் பிரச்சினையில்லை. முதலில் என்னோட திறமையை வெளிப்படுத்தணும். அதற்கேற்ற மாதிரி படங்களை தேர்வு செய்து நடிப்பேன்.
வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
தினம் தினம் புது புது விஷயங்களை கற்றுக்கொண்டு, அடுத்தடுத்த இடத்துக்கு முன்னேறிக் கொண்டே இருக்கணும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கணும். எந்த பிரச்சினை வந்தாலும் அதை கண்டு கலங்காமல் எதிர்த்து நின்று போராடணும், ஜெயிக்கணும். நான் எப்பவுமே மற்றவர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருக்கணும்னு நினைப்பவள்.

13 ஜூன் 2010

வந்தான் வென்றான் படத்திற்கு நயன்தாரா கதாநாயகி?


ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற படங்களை இயக்கிய கண்ணன் தற்போது ஜீவா வைத்து ‘வந்தான் வென்றான்’ படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். மும்பையில் நடக்கும் க்ரைம் திர்ல்லரை மையமாக எடுக்கப்படும் இந்த படத்திற்கு ஹீரோயின் தேடி வருகிறார் கண்ணன். கோலிவுட்டில் இப்ப இருக்கும் டாப் நடிகை முதல் புதுமுகம் வரை ஹீரோயின் தேடி வருகிறார் கண்ணன்.
தன்னுடைய முந்தைய படங்களில் மெல்லிய காதலை சொல்லிய கண்ணன் தற்போது க்ரைம் படத்தை இயக்குகிறார். இதனிடையே நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டு வருகிறார் கண்ணன். ஏற்கனவே ஜீவா, நயன் நடித்த ‘ஈ’ திரைப்படம் வெற்றி பெற்றது தொடர்ந்து. தற்போது சென்டிமேட்டாக ஜீவா-நயன் கூட்டணியே விரும்புகிறார் கண்ணன்.

08 ஜூன் 2010

மகனே மருமகனே,திரைப்படம்.

விவேக் நடித்த நகைச்சுவை திரைப்படம்

மகனே மருமகனே.

06 ஜூன் 2010

02 ஜூன் 2010

தீராத விளையாட்டுப்பிள்ளை.

தீராத விளையாட்டு பிள்ளை,படத்தில் இடம்பெற்ற பாடல்,

உங்கள் ரசனைக்கேற்ற பாடல்களை ரசிக்க அன்பு நண்பன் .கொம்.