பக்கங்கள்

24 ஏப்ரல் 2010

அன்பு நண்பனே!


அன்பு நண்பனே!சின்ன வயதில் கண்ட முகங்கள்எங்கே என்று தேடுகிறேன் பார்,உன்னை பிரிந்த தவிப்பில் நானும்,என்னை பிரிந்த தவிப்பில் நீயும்,காலம் எங்கோ உருண்டு போனது-ஆனாலும்மாறவில்லையே உன்னில் நானும்என்னில் நீயும்,காதலிகூட மறந்தவள் ஆனாள்-எனினும்நண்பனே உன்னை மறத்தல் கூடுமோ!நண்பனே உன்னை காணத்துடித்துஇணையம் எங்கணும் தேடிப்பார்க்கிறேன்,நானும் நீயும் ஓடித்திரிந்த புல் வெளிகளை நினைத்துப் பார்க்கிறேன்,எம்மை அவையும் நினைத்து வாடுமோ!எங்கோ ஓர் அந்நிய நாட்டில் நானும் இங்கே,அமைதியிழந்து வாடித்தவிக்கிறேன்ஆறுதல் கொடுக்க நண்பன் இல்லையே!எத்தனை சுற்றம்,எத்தனை உறவுகள் இருந்தும்,உன்போல் யாரடா எனக்கு ஆறுதல் அளிப்பார்,நீயும் புலத்திலா!நம் நிலத்திலா!என்றுஅறியவே முடியாமல் அந்நிய தேசத்தில்தவிக்கிறேன் நானடா!நண்பனே உன்னை எங்கு நான் தேடுவேன்!?